Tuesday, 26 July 2011

காஞ்சிபுரம் பட்டு

காஞ்சிபுரம், அதன் பட்டு sarees பிரபலமான உள்ளது. இந்த sarees மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும், ஒவ்வொரு thread மற்ற நெசவு மையங்கள் அந்த ஒப்பிடும்போது, மூன்று பட்டு இழைகளை, துணி நீடித்துழைக்கக்கூடியவை தயாரித்தல், ஒன்றாக முறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்த நிச்சயமாக ஆக்கப்பட்டவை என்று உள்ளது.

காஞ்சி ஒர் அறிமுகம்

வரலாறு

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. 

Saturday, 16 July 2011

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

எப்பொழுதும்  நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இது அளவிற்கு மீறிப் போகும் பொழுது வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியாகிவிடும். அவ்வாறு வெளியாகாமல் எஞ்சிய சர்க்கரையானது இரத்ததுடன் நேரடியாகக் கலக்கும் பொழுது, அதனால் வரும் விளைவு தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு வியாதியாகும்.

Friday, 8 July 2011

கருநாகம்

கருநாகம் அல்லது இராச நாகம் (King Cobra) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது).. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.

Thursday, 7 July 2011

மனித மூளை

மனித மூளை

மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

கடல் மாசுபாடு

பிளாஸ்டிக் குப்பை

மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள் தான் கடல் குப்பைகளில் பிரதானமானவையாய் இருக்கின்றன. இவை கடலில் மிதக்கின்றன அல்லது அடித்து செல்லப்படுகின்றன. இந்த கடல் குப்பைகளில் எண்பது சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும். இவை இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்தில் இருந்து துரிதமாய் பெருகி வருகின்றன. கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒலி மாசு

ஒலி மாசு (அல்லது சுற்றுசூழலில் மிகையான சத்தம்) என்பது மனதிற்கு ஒவ்வாத மனிதன்-, கால்நடைகள்- அல்லது இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு, இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்தின் காரணமாகும், குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.


Tuesday, 5 July 2011

33 செல்வங்க‌ள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,
   செலவழிக்கும் முன்சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். 
   கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
   
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் 
   போது தானும் தலையசைக்கும் நண்பன் 
   எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

கலாம் துவக்கிய

ஊழலை ஒழிக்க, அப்துல் கலாம் துவக்கிய இளைஞர்கள் இயக்கம் (இணையம்)


   

விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப் பில்
(லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொ ண்டு செல்ல, “லீடு விழுப்புரம் 2020′ திட்டத்தை         ஒருங் கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக் கன்றுகளை நட்டு சுற்றுப் புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத் தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள் வாங்கி அழிக்கிறது; 



ஹெல்மெட்

பாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும்?


டாக்டர் கலா தியகாராஜன் அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும் என் பதை அக்கு பங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து
கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி
நாளம் நடுமத்தியில் நேர்கோடாக அமைந்துள்ளது.


மணி துளிகள்

விருந்தினர்கள்