Monday, 22 August 2011
Tuesday, 26 July 2011
காஞ்சிபுரம் பட்டு
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 06:05
காஞ்சி ஒர் அறிமுகம்
வரலாறு
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 05:19
Saturday, 16 July 2011
சர்க்கரை வியாதி
சர்க்கரை வியாதியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
எப்பொழுதும் நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இது அளவிற்கு மீறிப் போகும் பொழுது வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியாகிவிடும். அவ்வாறு வெளியாகாமல் எஞ்சிய சர்க்கரையானது இரத்ததுடன் நேரடியாகக் கலக்கும் பொழுது, அதனால் வரும் விளைவு தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு வியாதியாகும்.
எப்பொழுதும் நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இது அளவிற்கு மீறிப் போகும் பொழுது வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியாகிவிடும். அவ்வாறு வெளியாகாமல் எஞ்சிய சர்க்கரையானது இரத்ததுடன் நேரடியாகக் கலக்கும் பொழுது, அதனால் வரும் விளைவு தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு வியாதியாகும்.Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 02:48
Friday, 8 July 2011
கருநாகம்
கருநாகம் அல்லது இராச நாகம் (King Cobra) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது).. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 06:22
Subscribe to:
Posts (Atom)

